Latest News

ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

புவனகிரி சட்டமன்ற தொகுதி கம்மாபுரம் குருவட்டத்திற்குட்பட்ட நெய்வேலி கிராமத்தில் வாக்காளர் எண்னுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.

ADMK நகர கவுன்சிலருடன் அஜித்குமார் பைக் ரைடு -இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்.

ADMK நகர கவுன்சிலருடன் அஜித்குமார் பைக் ரைடு -இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்.

இரண்டு நாள் இலவச ஆதார் அட்டை முகாம்

*மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் இலவச ஆதார் அட்டை முகாம் 450 பேர் பயன் பெற்றனர்.* ------------------------------ ஆகஸ்ட் மாதம் 29-ம் 30- தேதி இரண்டு நாட்கள் இலவச ஆதார் அட்டை முகாம் மும்பை செம்பூர் (வெஸ்ட்) திலக் நகர் போலிஷ் ஸ்டேஷன் அருகில் உள்ள பாரதி நகர் சொசைட்டி, ரஜினி பால்வாடியில் வைத்து *மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்* சார்பில் நடைபெற்ற நிகழ்வில் 450- பேர் பயன் அடைந்துள்ளனர். இன் நிகழ்வுக்கு மாநில தலைவர் *Amb. Dr. தளபதி SK.ஆதிமூலம்* தலைமையில் மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து இதுவரை மூன்று முறை நடைப்பெற்றது. பெயர், பிறந்த நாள் தேதி, விலாசம், புகைப்படம் புதுப்பித்தல், உட்பட புதிய ஆதார் அட்டை விண்ணப்பம் செய்தவர்களுக்கு உடனடியாக சரி செய்து இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. *கனிவுடன் -* மக்கள் பணியில் மாநில தலைவர் *Amb.Dr.தளபதி SK.ஆதிமூலம்,* மாநில இணை செயலாளர் *M.மரிய சிலுவை,* மாநில துணை செயலாளர்கள் *TK.ரஜினி மூர்த்தி, கவிஞர் முருகானந்தம், சதிஷ் ராமராஜ், C.வேல்முருகன், சார்ஜா சுவாமிநாதன், M.நம்பிராஜன் தாஸ், D.தண்டாபாணி,* மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் *T.ரஜினி தனவேல் நாட்டன்* உட்பட அணைத்து செயல் வீரர்கள். *குறிப்பு:* வெவ்வேறு கட்சியில் இணைந்து மன்றத்தின் பெயரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால் இனி மகளிரணி பொறுப்புகளை கலைத்து விட்டாகி யதை மீண்டும் ஒரு முறை தெரியப்படுத்துகிறோம், *பிறகட்சியில் சேர்ந்தவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப் படுகிறார்கள்,* மற்றப்படி தலைவர் ரஜினி அவர்கள் மீதும், சமூக பணி மீதும் ஆர்வமுள்ள மகளிர்கள் என்றும் போல் நீடித்து மன்றத்தின் பெயரையோ ? தலைவர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலோ நடந்தேறாமல் தொடர்ந்து பயணிப்பார்கள். "மேலும் சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் சமூக சேவையில் சாதனை பெற்று தர்மத்தின் தலைவன் ரஜினி அவர்களின் புகழுக்கு மணிமகுடம் சூட்டி நாமும் மகிழ்ந்து, எளியவர்களையும் மகிழ்வித்து எல்லாம் வல்ல இறைவனின் இதயத்தில் நிரந்தர குடியிருப்போம் ! *-ஜெய்ஹிந்த் !*

16 வயது மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை

புதுக்கோட்டையில் 16 வயது மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 16 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையுடன், ரூ.5.10 லட்சம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மண்டையூரில் 2021-ம் ஆண்டு ஊரடங்கின்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் சிறுமி கர்ப்பமானார்.

76 நிமிடங்கள் சிலம்பம் சாதனை

மதுரை மாவட்டம் யுசி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 76 நிமிடங்கள் சிலம்பம் சாதனை ஜாக்கி புக் ஆப் ரிக்கார்டு நிகழ்வில் 72 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் இந்நிகழ்வில் பள்ளி மாணவி ச.ஹரிணி (சிலம்பம் இளம் பயிற்சியாளர்) என்ற சிறுமி இந்திய அளவில் மாற்று திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி கொடுத்து சாதனை படைத்த முதல் பெண் என்ற சாதனை சான்றிதழ் கொடுத்து கௌரவ படுத்தபட்டார். ஹரிணி தொடர்ந்து நமது தமிழகத்திற்கும் மதுரை மாவட்டத்திற்கும் பெருமை தேடி வருவதை 72 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் மருத்துவர் பாண்டியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.ச.ஹரிணி சிலம்பம் இளம் பயிற்சியாளர் தமிழக அரசு விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்படை போலீசாருக்கு மரணம் விளைவிக்காத ஆயுதப் பயிற்சி

திண்டுக்கல் அருகே ஆயுதப்படை போலீசாருக்கு மரணம் விளைவிக்காத ஆயுதப் பயிற்சி திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள புத்தூர் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு கண்ணீர் புகை குண்டு மற்றும் மரணம் விளைவிக்காத ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக கலவரம், வன்முறை ஏற்படும் சமயங்களில் கண்ணீர்புகை குண்டுகள் வீசி அவர்களை கலைப்பது குறித்த பயிற்சி அளிக்கப்ப ட்டது. ஆயுதப்படை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் ஆயுதப்படை டிஎஸ்பி, ஆயுதப்படை ஆய்வாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர் முன்னதாக அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராம மக்கள் ஆடு,மாடுகளை மேய்க்க வேண்டாம் எனவும், பயிற்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்ப ட்டிருந்தனர்.

.பி.சி பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் பிறந்தநாள் விழா

தமிழக காங்கிரஸ் ஓ.பி.சி பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி பிரிவு மாநில தலைவர் .ஏ.நவீன் பிறந்தநாள் விழா இன்று (23-08-2022) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆர்.சதீஷ்குமார், எஸ்.அஷ்வின்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், வடசென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் கோவிலில் காலை 8 மணி அளவில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. மேலும் புரசை கீதா ஏற்பாட்டில் எஸ்.எம்.காமேஷ் தலைமையில் மத்திய சென்னை, அரும்பாக்கம், திருவள்ளுவர் நகரில் உள்ள தாய் கருணை இல்லத்தில் தங்கிற்க்கும் முதியோர்கள் அனைவருக்கும் மதியம் 1.00 மணி அளவில் அறுசுவை உணவும் நலத்திட்டங்களும் வழங்கினர். அதைத்தொடர்ந்து எல். சரவணன் ஏற்பாட்டில், தென் சென்னை சைதாப்பேட்டையில் மாலை 6 மணி அளவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் செ. ரஞ்சித்குமார், ஓ.பி.சி துறை மாநில துணைத் தலைவர்கள் புரசை.கீதா எம்.சி கே. கோபி கிருஷ்ணா, மாநில பொதுச்செயலாளர்கள் தீபண்பாண்டியன் பி.கே.பாட்ஷா, எஸ்.எம். கமல் துறைமுகம், எஸ்.கமல் துறைமுகம், பி. சபீர் அகமத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

வீடியோ செய்திகள்